Gallery

அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டு மறந்துடுச்சா?

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது எண்டர் அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும்

அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான (Repair) விருப்பை தெரிவு செய்யவும். அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம்.

 இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள்.

அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம்

இங்கு நீங்கள் விரும்பும் User Accounts கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு User Account ல் நுழையும்போது அதாவது லாக்-ஆன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்

மாற்றங்கள் செய்த பின்னர் அந்த டயலொக் பாக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயரிங்(Repair)  செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.
Share on Google Plus

0 comments:

மொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்

*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம்.  *#06 #இந்த குறிய...