
பணவீக்கம் என்பதை சிம்பிளாக இப்படிச் சொல்லலாம்: விலை ஏற்ற விகிதம்தான் பணவீக்கம்!
உதாரணம்: 2008-ல் சர்க்கரை விலை கிலோ ரூ 18. அது 2009-ல் ரூ 38 ஆகிவிட்டது. இந்த இரு காலகட்டத்துக்கும் இடையில் ஏறிய விலை விகிதம் 111.11. இதுதான் பணவீக்க விகிதம்!
நாட்டின் பணவீக்க அளவைக் குறிப்பிட முதன்மைப் பணவீக்கம் என்ற பதத்தை மீடியா பயன்படுத்துகிறது. பணவீக்கத்தின் முக்கியத்துவம் கருதியே இந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது. இதனை மத்திய அரசின் புள்ளிவிவர அமைச்சகம் கணித்து அறிவிக்கிறது.
இதைக் கணிக்க, நாட்டில் சந்தையில் விற்பனையாகும் உணவுப் பொருள்கள், தொழிற்சாலை உற்பத்திப் பொருள்கள் அனைத்தையும் ஒரு தொகுதியாக எடுத்துக் கொண்டு, அவற்றின் விலைகளுக்கு தனி நிறை (Weightage) தருவார்கள்.
இந்த நிறையில் கடந்த ஆண்டுக்கும் நடப்பு ஆண்டுக்கும் இடையிலான வித்தியாசம் முதன்மைப் பணவீக்க விகிதமாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால் இதில் உள்ள முக்கிய குறைபாடு, எந்தப் பொருளின் நிறை எண் அதிகமாக உள்ளதோ, அதைப் பொருத்தே பணவீக்கம் தீர்மானிக்கப்பட்டுவிடும் ஆபத்து உள்ளது.
பொதுவாக பணவீக்கம் 10 சதவீதம் என நீங்கள் படித்தால் அனைத்துப் பொருள்களின் விலையுமே 10 சதவீதம்தான் அதிகரித்திருக்கும் என நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. டீ விலை 10 சதவீதம் உயர்ந்திருக்கலாம். எண்ணெய் விலை 30 சதவீதம் கூட உயர்ந்திருக்கும். பழங்கள் விலை 5 சதவீதம் உயர்ந்திருக்கலாம். ஆனால் பணவீக்க சராசரியில் இந்த பாகுபாடு தெரியாமல் போகிறது.
பணவீக்கம் என்பது மனிதனின் வாங்கும் சக்தியைக் குறைத்துவிடுகிறது.
பணவீக்கத்தில் பல வகை உண்டு. 2 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே உள்ள பணவீக்கத்தை மிதமான வீக்கம் என்கிறது இந்திய அரசு.
பணவாட்டம் என்பது எதிர்நிலையைக் குறிக்கும். அதாவது விலைகள் வீழ்ந்து கொண்டே செல்வது.
இல்லாத பணவீக்கம் என்றொரு வகை உண்டு. பூஜ்யத்தைத் தாண்டாமல் 1 சதவீதத்துக்குள் உள்ள பணவீக்கத்துக்கு இந்தப் பெயர் பொருந்தும்.
இன்னொன்று மிகைவீக்கம். இது அசாதாரண, கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வைக் குறிக்கும்!
1 comments:
A family member referred me to your website. Thnx for the details.
Have a look at my webpage - Picture Booth Adelaide
Post a Comment