Gallery

தமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் - குப்பையில்!


தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது .

இங்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கையெழுத்து படிகள், பழமையான நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1627 அச்சிடப்பட்ட பழமையான் அச்சு புத்தகம் இங்கு பாதுகாக்கப் பட்டு வருகிறது .

தஞ்சை சரசுவதிமகால் நூலகம் உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்றாக சிறப்பாகக் கருதப்படுகின்றது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1400களிலே) இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி, அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை  நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும் , காகிதத்தில் எழுதிய நூல்களும்,ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது. கல்வெட்டில்  கிடைத்துள்ள ஆதாரங்களின் படி (ARE 168, 169, 1961-62) இந்நூலகம் முதலில் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும் இந்நூலகத்தில் பணி புரிதவர்களை சரசுவதி பண்டாரிகள் எனவும் என வழங்கப்பட்டது. கி.பி. 1122 முதலே இருந்தற்கான அடிக்கோள்கள் உள்ளன. 


தமிழர் நாட்டில் உள்ள பண்டைய ஓலை சுவடிகளில் 50 மட்டுமே இது வரை படித்து அறியப்பட்டுள்ளன. அதற்குள் அடங்கியவை தான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூற, புறநானூறு, பதிற்று பத்து, எட்டு தொகை, நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு சீவக சிந்தாமணி, பரி பாடல் போன்றவை. 

இதில் சில இலக்கியங்களின் செழுமையும் தொன்மையையும் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.

மூன்று லட்சம் ஓலை சுவடிகளையும் படித்தறிந்தால் தமிழனின் வாழ்க்கை முறையும் தமிழ் மொழியின் செழுமையும் பற்றி நாம் அறிந்து கொள்ள எதுவாக இருக்கும் .

உலகில் தோன்றிய மொழிகளில், மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழினம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க இந்த ஓலை சுவடிகள் உதவும்.

செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையான இலக்கியங்களை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு 

இதற்கு வெறும் நூறு கோடி ரூபாய் ஒதுக்கினால் போதுமானது.


இச்செய்தி ஏதோவொரு அரசு அதிகாரி அல்லது ஒரு அரசியல்வாதியிடம் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் சேரும் வரை தயவு செய்து
SHARE
செய்யவும்... 
ஏனென்றால் தமிழ் வளரவேண்டும் ...இன்னும் நல்ல நூல்கள் கிடைக்கவேண்டும் ....உதவுவீர்களா ???





Share on Google Plus

1 comments:

Asureshwaran said...

தமிழர்களின் வரலாறு மீண்டும் மலரப் போகிறது,,,-அசுரன்

மொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்

*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம்.  *#06 #இந்த குறிய...