Gallery

குங்ஃபூவும் போதி தருமனும்


சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு !!!


போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார்
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன்
என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.


போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று

சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)

டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.
டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்

தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது

ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué

யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

7.ப்ராஃடன் Yáng Xuànzhī 

பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

8.
தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்

9.
போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்

1.
நந்திவர்மன் I
2.
குமாரவிஷ்ணு II
3.
புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

11.
கால ஒற்றுமை
1.
போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.
விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).

3.28
குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.
(THANKS WIKIPEDIA )
STORY : -

போதி தருமன் ஒரு தமிழன். கி.பி.5ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ஒரு பல்லவ அரசனின் 3வது மகன்.சிறந்த வீரன். தற்காப்புக் கலைகளை விசேஷமாக பயின்றவன். அரசு, ஆட்சியை விரும்பாமல்மனம் சொல்லும் வழியில் செல்கிறான்.பிரஜ்னதரா என்கிற மஹாயான பௌத்த துறவியை தன் குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆன்மிகத்தில் தெளிவு பெறுகிறான்.

புத்த மதத்தை கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்ல விரும்பி, கடல் வழியே - இன்றையமலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம், தாய்லாந்து வழியாக 3 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு கி.பி.527ல் சீனா சென்றடைந்திருக்கிறான். சீனாவில் (போதி) தருமன்தா மோ என்று அழைக்கப்பட்டிருக்கிறான். தா மோ வை தெற்கு சீனாவை ஆண்டுகொண்டிருந்த அப்போதைய சீன அரசன் வூ வரவேற்று உபசரித்திருக்கிறான். அந்த மன்னனின் தற்பெருமை, அகம்பாவம் ஆகியவற்றை தா மோ வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளைவு -மன்னனின் கோபம், விரோதம். அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற உத்திரவு. பின்னர் வட சீனாவிற்கு சென்ற தா மோ, யாங்ட்சி ஆற்றின் கரையில் இருந்த ஷாவோலின் கோயிலை அடைகிறான்.

கோயிலில் இருந்தவர்களின் அழைப்பை முதலில் ஏற்காமல் அருகில் இருந்த மலைக்குகை ஒன்றில் தவம் இருக்க ஆரம்பிக்கிறான். மலைக்குகையில் ஒன்பது ஆண்டுகள் ஒரு சுவற்றின் முன்னால் உட்கார்ந்து கடுமையான தவத்தை மேற்கொள்கிறான். தவத்தின் விளைவாக, புதிய உத்வேகத்தைப் பெற்று, ஷாவோலின் கோயிலில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஷாவோலின் பள்ளியில், பிள்ளைகளுக்கு பௌத்தம், தியானம் மற்றும் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். (சீனாவில் தா மோ ) சீனாவில் புத்த மதம் பரவ, உறுதிப்பட முக்கிய காரணமாக இருந்தவன் இங்கிருந்து சென்ற தமிழன் போதி தருமன். போதி தருமன் என்கிற தமிழனால் உருவகம் பெற்றது தான் ஜென் புத்த மதம். புத்தரின் 28வது நேரடி சீடராக தருமனை சீனர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் ஜப்பானிலும் -வேறு வடிவங்களில் தருமன் புகழ் பெற்றான்.ஜப்பானில், அவன் அதிருஷ்டத்தைத் தருபவனாகக் கொண்டாடப்பட்டான்.

சீனாவிலும், ஜப்பானிலும் இன்றும் தாமோ வுக்கு ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றன. தருமனது முடிவு பற்றி வெவ்வேறு கதைகள் வழங்குகின்றன.அவன் 150 வயது வரை வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு ஜியாங் மலைச்சரிவில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறதுஆனால் அவனைப் புதைத்து 3 ஆண்டுகள் கழித்து, பாமியன் மலையருகே,கையில் ஒற்றைச் செருப்புடன் சென்று கொண்டிருந்த தருமாவைக் கண்டதாக, வெய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருக்கிறார். எங்கே போகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு, தர்மாஎன் வீட்டிற்கு செல்கிறேன்என்று சொன்னாராம். சந்தேகப்பட்ட மற்றவர்கள் தருமனின் கல்லறையை திறந்து பார்த்தபோது, அங்கே ஒற்றைச் செருப்பு மட்டுமே இருந்ததாகவும், தர்மாவின் உடலைக் காணவில்லை என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. போதி தருமன் பற்றிய வரலாற்றுக்கு சீனாவிலும், ஜப்பானிலும் பல வடிவங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவன் தமிழ் நாட்டில் காஞ்சியிலிருந்து சென்றவன் என்பதும், சீனாவில் ஜென் புத்த மதமும், தற்காப்புக் கலையை சொல்லிக் கொடுக்கும் ஷாவோலின் பள்ளியும் உருவாக அவன் முக்கிய காரணமாக இருந்தான் என்பதும் வரலாற்றில் ஒரே மாதிரி தான் கூறப்பட்டுள்ளன. உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது. சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு - தமிழ் நாட்டின் வரலாற்றில் காணப்படவில்லையே.


காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார்
Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால்

"The fighting techniques to train the body from India " 

என்ற பொருளை தருகின்றது.
Share on Google Plus

0 comments:

மொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்

*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம்.  *#06 #இந்த குறிய...