Gallery

உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை !!!

இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் விலை மதிக்கமுடியாத பொருள், இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும் 


ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர் வைரம்.

இதன் மதிப்பை சுலபமாக சொல்ல வேண்டும் எனில், “இதை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவு அளிக்க முடியும்”என்று அந்த கால வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
இந்த வைரம் பற்றிய பதிவுகள் 13ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்துவருகின்றன. இந்தியா, பாரசீகம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சி செய்த மன்னர்களிடம் இந்த வைரம் கைமாறி வந்துள்ளது.

இந்த வைரம் முதன்முதலில் அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரால் ஆந்திராவில் இருந்து கண்டறியப்பட்டது. பின்னர் கில்ஜி மீது படையெடுத்து வந்த குவாலியர் மன்னன் விக்ரமஜித்திடம் தஞ்சம் புகுந்தது.

அதற்கு பிறகு இந்தியாவை மெல்ல ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருந்த பாபரை எதிர்த்து நின்றனர் இப்ராஹிம் லோடியும், குவாலியர் மன்னன் விக்ரமஜித்தும். இங்கு தான் ஆரம்பம் ஆனது புகழ்பெற்ற பானிபட் போர். 

போரில் விக்ரமஜித் மடிந்து விட அவனுடைய குடும்பம் ஆக்ரா அரண்மனையில் ஒளிந்தகொண்டிருந்தது. பாபர் மகன் ஹுமாயூன் ஆக்ரா நகரை கைப்பற்றியபோது அந்த குடும்பத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அற்புதமான வைரத்தை ஹுமாயூனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

பின்னர் ஹுமாயூனிடமிருந்து பாரசீக மன்னன் ஷா தாமஸ் கைக்கு மாறிய வைரம் மீண்டும் தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷா மூலம் இந்தியா வந்தது. அதைத் தொடர்ந்து 17-ம் நூற்றாண்டில் ஷாஜகான் மூலம் மீண்டும் மொஹலாயர்கள் வசம் வந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. கி.பி. 1739-ல்

டெல்லியை நாசம் செய்த பாரசீக மன்னன் நாதிர் ஷா வசம் போனது.. கோஹினூர் – அதாவது, “மலையளவு ஒளிவீச்சு” என்று பெயர் வைத்ததும் நாதிர் ஷாதான். பின்னர் சில காலம் அவருடைய வாரிசுகள் கையில் இருந்த வைரத்தை பஞ்சாப் சிங்கம் ரஞ்சித்சிங் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்தார். 

1849ல் பிரிட்டிஷ்ஷார் பஞ்சாப்பைக் கைப்பற்றியவேளையில் லாகூரின் கஜானாவில் இருந்துவந்த இந்தவைரம் 
சர். ஜான் லாரன்ஸ் என்ற அதிகாரியின் கைவசம் வந்தது. அவர் தன் கோர்ட் பாக்கெட்டில் போட்டு பீரோவில் மறந்து வைத்து விட்டார். ஆறு வாரங்கள் கழித்து பதறியடித்துப் போய் அதை எடுத்து விக்டோரியா மாகாராணிக்குப் பரிசளித்தார். அன்று முதல் இன்று வரை பிரிட்டிஷ் கிரீடத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறது இந்த கோஹினூர் வைரம்..

கோஹினூர் வைரமானது ஆரம்பகாலத்தில்(இந்தியா, பாரசீகம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில்) 186 கரட் பெறுமதியினைக் கொண்டு நீள்வட்ட வெட்டு வடிவமுடையதாகவிருந்தது.(அதாவது சிறிய கோழி முட்டையினை ஒத்த வடிவம் மற்றும் அளவு).

பட்டை தீட்டப்பட்டு தற்சமயம் 108.93 (21.6 கிராம்)
கரட் பெறுமதியினைக் கொண்டுள்ள கோஹினூர் வைரமானது டவர் லண்டன் அருங் காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கோஹினூர் வைரமானது,

 கோஹினூர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் கொல்லூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. கொல்லூர் சுரங்கத்தில், ரேயலசீமா(ரேயலசீமா என்றால் கற்களின் நிலம் என்ற பொருளாம்) வைரக்கல் சுரங்கத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டதாம். கோஹினூர் வைரமானது ஒரு அரச பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரைக்கு கைமாற்றாகி வந்தது. இந்த வைரத்தின் உண்மையான பெயர் "சமாண்டிக் மனி" என்பதாகும்.


1739ல் பாரசீக மன்னர் நடீர் ஷா, இந்தியாவினை ஆக்கிரமித்தபோது இந்தவைரத்தினை "ஒளியின் மலை" என்று வர்ணித்திருந்தாராம். " மலையின் ஒளி
" என்பதற்கான பாரசீக-அரபுப் பதமானது "கோஹினூர்" என்பதாகுமாம்.

"கோஹினூர்"
 வைரம் தொடர்பில் ஒரு வழிவந்த வரலாறுஉள்ளதாம், அது யாதெனில்; "எவன் இந்த வைரத்தினைவைத்திருக்கின்றானோ அவன் இந்த உலகத்தினைஆள்வான். ஆனால் இதன் துரதிஷ்டம் யாதெனில் கடவுள்அல்லது ஒரு பெண் மட்டுமே இதனை அணிந்துகொள்ளலாம்என்பதாகும்". 



"கோஹினூர்" வைரத்தினை உரிமையாக வைத்திருந்த அரசர்களின் வாழ்க்கையினை நோக்கினால் அவர்களின் வாழ்வில் வன்முறைகள், மரணங்கள், பெளதிக மற்றும் உள தாக்கங்களே நிறைந்துள்ளதால் என்னவோ, பிரிட்டிஷ் மகாராணிகளில் இதுவரை விக்டோரியா மகாராணி மாத்திரமே "கோஹினூர்" வைரத்தினை அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1937ம் ஆண்டு இந்த வைரமானது தற்சமயம் பிரிட்டிஷ் மகாராணியாக பதவிவகிக்கும் எலிஷபெத் மகாராணியாரின் முடிசூட்டும் விழாவின்போது அவரிடம் கையளிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கமானது "கோஹினூர்" வைரத்தினை தம்மிடம் கையளிக்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்தினை பலதடவைகள் கேட்டுக்கொண்டாலும் அதற்கு பதவிவகித்த எந்தவொரு பிரிட்டிஷ் அரசாங்கமும் ஒத்துக்கொள்ளவில்லை என்பதிலிருந்து அதன் மகிமையினை புரிந்துகொள்ளமுடிகின்றது அல்லவா?.......

தோழர்களே! கட்டுரையை படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை பதியுங்கள். 
Share on Google Plus

0 comments:

மொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்

*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம்.  *#06 #இந்த குறிய...